அஜித் நடித்துள்ள விடாமுயற்சி என்ற திரைப்படம், வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு, மிகப்பெரிய அளவில், ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்நிலையில், அஜித் குறித்து நெட்டிசன் பதிவிட்டு பதிவு ஒன்றிற்கு, பார்த்திபன் தனது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதனால், அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதாவது, லியோ படத்தில் இடம்பெற்ற விஜயின் லுக்கில், அஜித்தை ஏ.ஐ மூலமாக மாற்றி, நெட்டிசன் ஒருவர் பதிவு வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், பார்த்திபன் போலவே அஜித் உள்ளார் என்று, விஜயின் கதாபாத்திர பெயரை, அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அந்த நெட்டிசன் தன்னைதான் குறிப்பிடுகிறார் என்று தவறாக புரிந்துக் கொண்ட பார்த்திபன், அவருக்கு தனது நன்றியை தெரிவித்திருந்தார்.
பார்த்திபன் தவறாக புரிந்துக் கொண்டதை அறிந்த நெட்டிசன்கள், மீம்ஸ் போட்டு, பார்த்திபனை கலாய்த்து வருகின்றனர். ஒருசிலர், அவருக்கு ஆதரவாகவும் தங்களது கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.