Connect with us

Raj News Tamil

திருமணத்தில் பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர் வெடித்ததில் புதுமாப்பிள்ளை பலி..!

இந்தியா

திருமணத்தில் பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர் வெடித்ததில் புதுமாப்பிள்ளை பலி..!

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹேமேந்திரா மேராவி (வயது 22). இவருக்கு கடந்த 1-ந்தேதி அவருக்கு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது ஹோம் தியேட்டர் ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. அதனை பிரித்து ஆன் செய்த போது திடீரென அது வெடித்து சிதறி உள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே புதுமாப்பிள்ளை பலியானார்.

அவரது சகோதரர் ராஜ்குமார் (வயது 30), ஒன்றரை வயது சிறுவன் உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் ஹேமேந்திராவின் சகோதரர் உயிரிழந்து விட்டார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top