சினிமா விமர்சகர்களுக்கு செக் வைத்த சினிமாத்துறை!

சினிமா விமர்சகர்களின் மீது சினிமாத்துறையினருக்கு எப்போதும் ஒரு கோவம் இருந்து தான் வந்துள்ளது. நீண்ட நாள் இருந்து வரும் இந்த கோபம், நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்த காலத்தில், சற்று அதிகரித்துள்ளது. படம் வெளியாகி, முதல் காட்சி முடிந்த உடனேயே, விமர்சனத்தை Youtube-ல் பலரும் வெளியிட்டு விடுகிறார்கள்.

இதனால், படத்தின் வசூலில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. குறிப்பாக, Blue Sattai மாறன் போன்ற Youtuber-கள் படத்தை மோசமாக விமர்சிப்பதால், வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனை சமாளிப்பதற்கு, சினிமாத்துறையினர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

அதன்படி, படம் வெளியாகி, 3 நாட்களுக்கு பின்னரே விமர்சனத்தை Youtube-ல் வெளியிட வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர். மேலும், படத்தின் Public Review-களையும் 3 நாட்களுக்கு பின்னர் தான் வெளியிட வேண்டுமாம். இந்த முடிவுகள் அனைத்தும், இன்னும் சில நாட்களில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.