புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்…யார் இந்த சிவ்தாஸ் மீனா?

2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு மாநில தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளாக தலைமைச் செயலராகப் பணியாற்றி வந்த இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவ்தாஸ் மீனா கவனித்து வரும் நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் பதவி கார்த்திகேயனுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் இந்த சிவ்தாஸ் மீனா?

சிவ்தாஸ் மீனா 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். இவருடைய பூர்வீகம் ராஜஸ்தான். இவர் ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் படித்துள்ளார்.

இதையடுத்து ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்ட இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக இருந்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News