உலகம் முழுவதும் கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. லாக்டவுன் போடப்பட்டதால், பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது.
பல்வேறு முயற்சிகளால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தற்போது புதிய ஆபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது, சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்த வைரஸ் தொற்று, இந்தியாவிலும் சிலருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்று குறித்து, முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனையின் முடிவில், பல்வேறு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படலாம் போன்ற கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் என்றும் சொல்லப்படுகிறது.