இந்திய நாட்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1-ஆம் தேதி அன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில், புதிய வருமான வரி மசோதா 2025 தாக்கல் செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
அந்த வகையில், இன்று, நாடாளுமன்றத்தில், அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “புதிய வருமான வரி மசோதாவின் படி, வரி செலுத்துவோருக்கு புரியம் வகையில், பல்வேறு வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே இருந்த நீளமான சொற்களுக்கு பதிலாக, எளிய சிறிய சொற்கள் மாற்றப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த மசோதா ஆய்வு செய்வதற்காக, நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில், இந்த மசோதா நடைமுறைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.