இந்தியாவில் பல முன்னணி ஐ.டி நிறுவனங்கள், ஊழியர்களின் செலவை குறைக்கும் விதமாகவும், புதிதாக ஊழியர்களைப் பணியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் பெரிய பெரிய நகரங்களைத் தாண்டி 3-ஆம் கட்ட நகரங்களுக்குத் தனது கிளை நிறுவனங்களை திறந்துவருகிறது.
அந்த வகையில் ஆப்டிசொல் (Optisol) பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் என்ற ஐ.டி கம்பனி மதுரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் வடபழஞ்சி ஐ.டி பார்க்-ல் தனது அலுவலகத்தைத் திறக்க உள்ளது.
இந்த நிறுவனம் ஏற்கனவே மதுரையில் அலுவலகத்தை வைத்திருக்கும் நிலையில் தற்போது வடபழஞ்சி ஐடி பார்க்-ல் புதிய அலுவலகத்தைத் திறப்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 5-கோடி ரூபாய் முதலீட்டில் (ஆப்டிசொல் )Optisol பிஸ்னஸ் சொல்யூஷன்ஸ் நிறுவுகிறது.
இதன் மூலம் சுமார் 2000-பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவரான கார்த்திக் சந்திரன் தனது டிவிட்டரில், மதுரையில் 8-ஏக்கர் நிலத்தில் புதிய அலுவலகத்திற்காகத் திட்டத்தின் பதிவை முன்வைத்த நிலையில்,இன்று ELCOT கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது எனக் கார்த்திக் சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவில் குளம் என கலாச்சாரத்திற்கு பெயர்பெற்ற மதுரை இனி தொழில்துறையிலும் வளர்ச்சியடையந்து கொடி கட்டி பறக்கவிருக்கிறது.