மறுபடியும் கொரோனாவா..!! உருவாகி வரும் புதிய வகை கொரோனாவால் மக்கள் அதிர்ச்சி

2019ஆம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மடிந்தன. ஏறக்குறையை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மக்கள் கொரோனாவில் இருந்து விடுபட்டு நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய வகை EG.5.1 என்ற கொரோனா பரவி வருவது மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அறிக்கையின்படி, ஜூலை மாத இறுதியில் 70ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை ஆகஸ்ட் ஆறாம் தேதி 115 ஆக அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

E.G.5.1 வகை கொரோனா. இந்தியாவில் பெரிய அளவில் இந்த வகை கொரோனா பரவவில்லை. ஆனாலும், தொடர்ந்து எண்ணிக்கையை கவனித்து வருகிறோம்” என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

Recent News