பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில், ஆங்கிலேயர் காலகட்டத்தில் பாம்பன் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் அதன் வலிமையை இழந்ததையடுத்து, புதிய பாலம் கட்டுவதற்கு, மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

அதன்படி, 550 கோடி ரூபாயில், கடந்த டிசம்பர் மாதம், புதிய பாலம் பாம்பன் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டது. அனைத்து விதமான சோதனை பணிகளும் முடிந்த நிலையில், பிரதமரின் தேதிக்காக, அதன் திறப்பு விழா தள்ளிப் போடப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக கட்டப்பட்ட நவீன பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, ராம நவமியை யொட்டி, ராமேஸ்வரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு அங்கு சென்றுள்ளார்.

RELATED ARTICLES

Recent News