நீதிமன்றங்களில், நீதி தேவதையின் சிலை இடம்பெற்றிருக்கும். இந்த சிலையின் ஒரு கையில் வாளும், இன்னொரு கையில் தராசும் இருக்கும் நிலையில், அதன் கண்கள், கருப்பு துணியால் மூடப்பட்டிருக்கும்.
இந்த சிலை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் உள்ள நூலகத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், நீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட்டிருக்கும் வகையிலான சிலை, திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திறந்து வைத்துள்ளார்.
இப்புதிய நீதிதேவதை சிலை சொல்லும் செய்தி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சட்டம் பார்வை அற்றது அல்ல என்பதையும் சட்டத்தின் முன் சமத்துவத்தை வலியுறுத்திட நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறிக்கிறது.
எனவே சட்டம் ஒருபோதும் பார்வை அற்றது ஆகாது, அது அனைவரையும் சமமாகப் பார்க்கிறது என்பதை உணர்த்த கறுப்பு துணி அகற்றப்பட்டுள்ளது.