இயக்குனர் பா.ரஞ்சித், சியான் விக்ரம் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் தங்கலான். கர்நாடக மாநிலம் கேஜிஎஃப் குறித்த கதை என்று இயக்குனர் தெரிவித்த நிலையில், படத்தின் மீது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. மேலும் சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது தங்கலான் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், இன்னும் 3-வாரங்களில் அனைத்து படப்பிடிப்பும் முடிவடைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. தங்கலான் படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.