வடகிழக்கு வருமழை என்பது, செப்டம்பர் மாத இடைப்பட்ட நாட்களில் இருந்து, டிசம்பர் மாத இடைக்கால நாட்கள் வரை இருக்கும். இந்த மாதங்களில், கனமழை கொட்டித்தீர்ப்பது வழக்கம்.
அந்த வகையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது ஃபெஞ்சல் என்ற புயல் மையம் கொண்டுள்ளது.
இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து 110 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டுள்ளது. புயலின் வேகம், மணிக்கு 13 கி.மீட்டராக உள்ளது என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.