புத்தாண்டு தினம்.. நேற்று ஒரே நாளில் இத்தனை ஆயிரம் ஆணுறை விற்பனையா?

டிசம்பர் 31-ஆம் தேதி மாலை முதலே, புத்தாண்டு தினத்தை கொண்டுவதற்கு பொதுமக்கள் தயாராகிவிட்டனர். கோவில்கள், தேவாலயங்களில் ஒரு பக்கம் கூட்டம் கூடினால், இன்னொரு பக்கம், உணவு விடுதிகள், பார்கள் என்று பல்வேறு இடங்களில், பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடி வந்தனர்.

இவ்வாறு இருக்க, எந்த பிரியாணி அதிகம் ஆர்டர் செய்யப்பட்டிருக்கும் என்று ஸ்விகி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 75 சதவீதம் பேர் ஐதராபாத் பிரியாணிக்கும், 14 சதவீதம் பேர் லக்னோ பிரியாணிக்கும், 11 சதவீதம் பேர் கொல்கத்தா பிரியாணிக்கும் வாக்கு அளித்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 10.25 மணிக்குள்ளாகவே, 3 புள்ளி 50 லட்சம் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும், 31-ஆம் தேதி மட்டும், 61 ஆயிரத்து 287 பிட்சா ஆர்டர் செய்யப்பட்டதாகவும், 1 புள்ளி 76 லட்சம் சிப்ஸ் பாக்கெட்டுகள் ஆர்டர் செய்யப்பட்டதாகவும், கூறப்பட்டுள்ளது.

இதைவிட சுவாரசியமான தகவல் என்னவென்றால், 12 ஆயிரத்து 344 கிச்சடி உணவு நேற்று ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கடைசியில், மளிகை பொருட்கள் விநியோகிக்கும் ஸ்விகி இன்ஸ்மார்ட் நிறுவனம் மூலம் 2,757 டியூரெக்ஸ் ஆணுறைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

Recent News