ஆங்கில புது வருடம் வெளிநாடுகளில் நமக்கு முன்பே பிறந்து விடுகிறது. இதன்படி நியூசிலாந்து நாட்டில் புது வருடம் பிறந்து விட்டது. வண்ண வண்ண வான வேடிக்கைகள், பட்டாசு வெடிப்புகளுடன் மக்கள் அதனை வரவேற்று வருகின்றனர். நியூசிலாந்து நாடு முதலில் 2025-ம் ஆண்டை வரவேற்கும் நாடாக உள்ளது.
அதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியா புதுவருட பிறப்பை வரவேற்கும். அந்நாட்டின் சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்கள் புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபடும்.
தொடர்ந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும், அவற்றுடன் சீனா மற்றும் பிலிப்பைன்சும் அடுத்தடுத்த சில மணிநேரங்களில் 2025-ம் ஆண்டை வரவேற்கும். புது வருட பிறப்பை ஒட்டுமொத்த உலகமும் வரவேற்பதற்கு 26 மணிநேரம் எடுக்கும்.