2023 ஆண்டுக்கு விடை கொடுத்து 2024 ஆம் ஆண்டு பிறந்த புத்தாண்டை முன்னிட்டு சென்னை முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏராளமான மக்கள் சென்னை காமராஜர் சாலை ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்தனர்.
ஒரு புறத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் விதிமுறைகள் என்ற பெயரில் பொதுமக்களை காவல்துறையினர் பல இடங்களில் அலைக்கழித்தனர் மெரினா கடற்கரைக்கு செல்லக்கூடிய பிரதான சாலைகள் முழுவதுமாக தடுப்பு வேலைகள் அமைத்து பொதுமக்கள் வராத வகையில் தடுத்தனர்.
சென்னை பட்டினப்பாக்கம் சாந்தோம் மயிலாப்பூர் வாலாஜா சாலை உள்ளிட்ட பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்த மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படாததால் தொலைதூரத்தில் இருந்து வந்த மக்கள் பல இடங்களில் நிறுத்திவிட்டு நீண்ட தூரம் நடந்து வந்தே மெரினா கடற்கரையை அடைந்தனர்.
பொதுமக்கள் மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பங்கு பெறலாம் என முன்கூட்டியே தெரிவித்திருந்தால் அதற்கான ஏற்பாடுகளுடன் வந்திருப்போம் எனவும் ஆனால் வாகனங்களில் வந்து பல இடங்களில் அலைக்கழிக்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர் இருந்தாலும் புத்தாண்டை வரவேற்க வேண்டும் என ஆர்வத்துடன் மெரினா கடற்கரைக்கு குடும்பத்துடன் நடந்தே வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
ஆரம்பத்தில் குறைவான மக்கள் வந்தாலும் நேரம் செல்லச் செல்ல மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் குறிப்பாக ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர்கள் இளம் பெண்கள் நடனமாடியும் இசை வாத்தியம் வாசித்தும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இரவு 12 மணி ஆனவுடன் வான வேடிக்கை வெடித்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.