சாயம் வெளுத்த குஜராத் மாடல் – சீட்டுக்கட்டாக சரிந்த புதிய பாலம்!

குஜராத் மாநிலம்,ஆனந்த் மாவட்டத்தில் உள்ள தண்டி யாத்ரா மார்க் என்ற இடத்தில் புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. பாலத்தின் கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து இன்னும் சில நாட்களில், திறந்து வைக்கப்பட உள்ள நிலையில்,கடந்த புதன் அன்று பாலத்தின் ஒருபக்கம் மடமடவென்று சரிவடைந்தது.

இந்த சம்பவத்தின் போது உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் தேசிய ஊடக குழு உறுப்பினர் சுரேந்திர ராஜ்புத், தனது டிவிட்டர் பக்கத்தில் பாலத்தின் இடிந்த பகுதிகளை பதிவிட்டு, மோடியின் சொந்த மாநிலத்திலேயே இதுபோன்று அவலம் நடந்துள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் இது கடவுளின் செயல் அல்ல,மோசடியின் செயல் என்றும் மோடியின் குஜராத் மாடலின் வழியில் கட்டப்பட்டது இப்படி தான் இருக்கும் எனக் ட்வீட் செய்துள்ளார்.