திருச்செந்தூரில் ரூ.3.82 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகம் திறக்கப்பட்டது.

திருச்செந்தூரில் ரூ.3.82 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தாலுகா அலுவலகத்தை அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ரூ.3.82 லட்சம் மதிப்பில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இதனை அடுத்து தமிழக மீன்வளம் , மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இதனையடுத்து 18 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியதற்கான ஆணையை வழங்கினார். முன்னதாக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களின் இருக்கைகளுக்கு சென்று ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

இதனையடுத்து மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.