சத்தீஸ்கர் மாநிலம் சமரி எனும் பகுதியை சேர்ந்தவர் ஹேமேந்திரா மேராவி. 22 வயதான இந்த பெண்ணும், சர்ஜூ என்ற நபரும், காதலித்து வந்துள்ளனர். ஆனால், திடீரென இவர்கள் இருவரும் பிரிந்து சென்றதால், அந்த பெண்ணுக்கு, ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று, வேறொரு ஆணுடன் திருமணம் நடந்தது.
அந்த திருமணத்திற்கு நல்லவர் போல் வந்த சர்ஜூ, பரிசாக ஹோம் தியேட்டர் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். முன்னாள் காதலனாக இருந்தாலும், அன்புடன் பரிசு வழங்கி உள்ளாரே என்று ஹேமேந்திராவும் நினைத்துள்ளார். ஆனால், அதன்பிறகே அவருடைய உண்மையான முகம் தெரியவந்துள்ளது.
அதாவது, அவர் பரிசாக வழங்கிய ஹேம் தியேட்டரை On செய்தபோது, அது வெடித்து சிதறியுள்ளது. இதில், பலத்த காயம் அடைந்த ஹேமேந்திராவின் கணவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுமட்டுமின்றி, ஒன்றரை வயது சிறுவன், புதுமாப்பிள்ளையின் சகோதரர் உட்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அந்த 4 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாப்பிள்ளையின் சகோதரரும் தற்போது உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதலில் தற்செயலாக நடந்த சம்பவம் என்று நினைத்திருந்த நிலையில், அதன்பிறகே, ஹேம் தியேட்டரில் வெடிகுண்டு வைத்து, வெடிக்க வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண்ணின் முன்னாள் காதலரை கைது செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.