ஆண்மையை பரிசோதித்த புது மனைவி.. கொடூரமாக வெட்டிக் கொன்ற கணவன்..

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வந்தவர் சரவணன். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவரது குடும்பத்தினர், ஆந்திராவில் வசித்து வந்தனர். இந்நிலையில், சரவணனுக்கும், ருக்மணி என்ற பெண்ணுக்கும், கடந்த 1-ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த அன்றைய தினமே, முதலிரவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாமல் சரவணன் இருந்ததால், இதுகுறித்து தனது பெற்றோரிடம் ருக்மணி கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், சரவணனுக்கு ஆண்மை தொடர்பான மருத்துவ பரிசோதனையை, அவருக்கே தெரியாமல் எடுத்துள்ளனர்.

இந்த தகவல் தெரிந்ததும் கடும் கோபம் அடைந்த அவர், தனது மனைவியையும், அவரது குடும்பத்தையும், கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, மாமனார் குடும்பத்தை தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்த அவர், தனது தந்தையின் உதவியுடன், மனைவி, மாமியார், மாமனாரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில், மனைவி மற்றும் மாமியார் உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் மாமனார் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், சரவணன் மற்றும் அவரது தந்தையை கைது செய்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News