Connect with us

Raj News Tamil

காலை உணவுத் திட்டம் குறித்து செய்தி: பிரபல நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

தமிழகம்

காலை உணவுத் திட்டம் குறித்து செய்தி: பிரபல நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

காலை உணவு திட்டத்தை குறித்து பிரபல நாளிதழ் ஒன்று முகப்பு பக்கத்தில் வெளியிட்ட செய்தி சர்ச்சைக்குள்ளானது. அந்த நாளிதழுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் X பக்கத்தில் (டிவிட்டர்) வெளியிட்ட பதிவு:

உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.

‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!

தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

More in தமிழகம்

To Top