பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர் ஒன்றில், நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார்.
இந்த தொடரின் டப்பிங் பணியின்போது, மாரடைப்பு ஏற்பட்டு, சமீபத்தில் உயிரிழந்தார். இது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுமட்டுமின்றி, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில், இவருக்கு பதில் வேறு யார் நடிப்பார்? என்றும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
அதாவது, இந்த கதாபாத்திரத்தில், நடிகரும், பிரபல எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
யார் நடித்தாலும்? மாரிமுத்துவை ஈடு செய்ய முடியாது என்பதே பலரது கருத்தாக இருந்து வருகிறது.