ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்ததன் பேரில் மாநில காவல்துறையுடன் இணைந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.