தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை எழும்பூர் விழுப்புரம் வழித்தடத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது இதனால் இரவு 12.25 மணி முதல் 2.25 மணி வரை 2 மணி நேரத்திற்கு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11:59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில் சேவை இன்று எட்டாம் தேதி மற்றும் 9, 10, 13, 14, 15, 16, 17, 19, 20, 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில் சேவை 19ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.