இன்று முதல் இரவு ரயில்கள் ரத்து! – தெற்கு ரயில்வே!

பராமரிப்புப் பணி காரணமாக இன்று முதல் இரண்டு வாரத்திற்கு கடற்கரை – தாம்பரம் இடையே இரவு மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்,

பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நவம்பர் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், அந்த நாள்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News