நீலகிரி- மன்சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர சுற்று வட்டாரப் பகுதிகளான அருவங்காடு, பர்லியார், காட்டேரி வெலிங்டன் ஆகிய பகுதிகளில் இரவு 8 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மழை நீர் பெருக் கெடுத்து ஓடியது.

இந்த நிலையில் குன்னூர் கிருஷ்ணாபுரம் லட்சுமி தியேட்டர் பின்புறம் பகுதியில் வசிக்கும் ரவி, ஜெயலட்சுமி தம்பதியினர் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

இரவு பெய்த மழையால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அப்போது கதவை திறந்து பார்த்த போது வீட்டின் முன்பு இருந்து மண் சரிந்து விழுந்ததில் ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உடனடியாக அவரது கணவர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரை மன் சரிவில் சிக்கி இறந்த ஜெயலட்சுமி உடலை மீட்டு அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வீட்டில் சிக்கி இருந்தவர்களையும் மீட்டனர்.

இறந்த ஜெயலட்சுமி குன்னூர் தனியார் பள்ளியில் இந்தி ஆசியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News