சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாஸ்டர் நாடாளுமன்ற தொகுதியில், முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள லேண்ட்ரா கிராமத்தின் அருகே, காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே, இன்று காலை 6 மணிக்கு மோதல் ஏற்பட்டது.
இந்த தாக்குதலில், மாவட்ட வனத்துறை காவலர்கள், சிறப்பு காவல் படை, மத்திய வனத்துறை காவலர்கள், காமாண்டோக்கள் ஆகியோர், ஈடுபட்டனர். இந்த தாக்குதலின் இறுதியில், 9 மாவோயிஸ்டுகள், சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து, தானியங்கி ஆயுதங்கள், மெஷின் கன் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதுமட்டுமின்றி, மற்ற மாவோயிஸ்டுகளை தேடும் பணி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.