ஒரு தலை காதல்: ஒன்பதாம் வகுப்பு மாணவி வெட்டி கொலை!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் ராம்பில்லி மண்டலம் கொப்பு குண்டுபாலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடரமண – வரலட்சுமி தம்பதிக்கு தர்ஷினி (14) என்ற மகள் உள்ளார்.

பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்த நிலையில் தர்ஷினி ராம்பில்லி ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

தர்ஷினியை அதேபகுதியை சேர்ந்த பொடாபத்துலா சுரேஷ் (26) ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் பள்ளி செல்லும்போதும் வரும்போதும் காதலிக்குபடி தொடர்ந்து தர்ஷினிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனை தர்ஷினி பெற்றோரிடம் தெரிவித்ததால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர் போலீசாரும் போக்சோ வழக்குப்பதிவு செய்து சுரேஷை சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து ஜாமினில் சில நாட்கள் முன்பு வெளியே வந்த சுரேஷ் பழிவாங்க காத்திருந்தான்.

இந்நிலையில் தர்ஷினி பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதை அறிந்த சுரேஷ் தர்ஷினிக்காக காத்திருந்தார். பள்ளியில் இருந்து வந்த தர்ஷினி அதேபகுதியில் உள்ள பாட்டி காந்தம்மா வீட்டிற்கு சென்று சாவியை எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்கு சென்றார். இரவு 7.40 மணிக்கு சுரேஷ் வீட்டிற்கு சென்று தர்ஷினியை இளநீர் வெட்டும் கத்தியை கொண்டு வெட்டினார்.

அதேநேரத்தில் தர்ஷினி பாட்டி வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உள்ளே மூடியிருப்பதை பார்த்து கதவை தட்டி சிறிது நேரம் காத்திருந்த பிறகு வீட்டுல் இருந்து வந்த சுரேஷ் கதவைத் திறந்த பாட்டி காந்தம்மாவை தள்ளிக் கொண்டு ஓடினார். பாட்டி கந்தம்மா உள்ளே சென்று பார்த்தபோது தர்ஷினி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து கிடப்பதை பார்த்து போலீசில் புகார் அளித்தார்.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடவியியல் ஆதாரங்களை சேகரித்தனர். மேலும் தர்ஷினி வாயில் துணிகளை வைத்து பலாத்காரம் செய்யப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாநில உள்துறை அமைச்சர் அனிதா அனகாப்பள்ளி மாவட்ட எஸ்.பி. கே.வி.முரளிகிருஷ்ணாவிடம் தொலைபேசியில் பேசினார். விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளியை விரைவில் பிடிக்க நான்கு தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டு தலைமறைவாக உள்ள சுரேஷ்சை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News