தாக்கல் செய்யப்பட்டது மத்திய பட்ஜெட்!

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தது. 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், நிதியமைச்சராக நிர்மலா சீதாராமனும் 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர், குடியரசு தலைவரின் உரையுடன் நேற்று தொடங்கியது.

கூட்டத் தொடரின் 2-வது நாளான இன்று, நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள நலத்திட்டங்கள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விவரங்களை, நீதியமைச்சர் வாசித்து வருகிறார்.

RELATED ARTICLES

Recent News