ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர், நேற்று தொடங்கியது.
இது இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எம்.பி-க்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றியிருந்தார்.
மேலும், அடுத்த நாள் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், நேற்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
தற்போது, பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து, உரையாற்றி வருகிறார். இது இவர் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.