நிர்மலா சீதாராமன் அதிரடி முடிவு!

இந்திய பொருளாதாரத்தை மேலும் உயர்த்தும் விதமாக, அடுத்த நிதியாண்டின் பட்ஜெட் இருக்கும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர், சர்வதேச நிதி ஆணையம் சார்பாக நடைபெறும், உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கிறார். இதனிடையே வாஷிங்டனில், ப்ரூக்கிங்ஸ் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் நடத்திய நேர்காணலில் அவர் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில், முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனக் கூறினார்.

இதனிடையே, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என, சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வருடாந்திர அறிகையில், 2021-22-ஆம் நிதியாண்டில் இருந்த 8.7 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2022-23-ஆம் நிதியாண்டில் 6.8-ஆக குறையும் என தெரிவிக்கப்படுள்ளது.