நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் 220 கோடி கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன என்றும், பிரதமர் கிசான் திட்டத்தில், 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில், உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து பேசிய அவர், அந்த துறை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம், 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து வெற்றி கண்டுள்ளோம் என்றும்,அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட நிதியமைச்சர், அது 1.97 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.