மனித கழிவுகளை அகற்றுவதை மனிதனே அல்லும் அவலும், இந்தியாவில் தான் நடந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும், தொடர்ந்து நடைபெற்றுதான் வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும், பலர் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்வதற்காக இறங்கி பலியாகும் சம்பவங்களும் நடந்துக் கொண்டு தான் வருகின்றன. இந்த சம்பவங்கள் அனைத்தையும் தடுப்பதற்கு, 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நிதியமைமச்சர் நிர்மலா சீதாராமன், மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, சமூக ஆர்வலர்களிடையே நல்ல பாராட்டுக்களை பெற்றுள்ளது.