Connect with us

Raj News Tamil

நிஷிகந்த் துபேவின் அடுக்கடுக்கான கேள்விகள்.. வாய் திறப்பாரா மஹூவா மொய்த்ரா?

இந்தியா

நிஷிகந்த் துபேவின் அடுக்கடுக்கான கேள்விகள்.. வாய் திறப்பாரா மஹூவா மொய்த்ரா?

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹூவா மொய்த்ரா, மக்களவையில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் தனது உரிமைகளை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில், பல்வேறு கேள்விகளை கேட்டு வந்துள்ளார்.

இந்த கேள்விகளில் பெரும்பாலானாவை, தொழிலதிபர் தர்ஷன் ஹிரனந்தானிக்கு ஆதரவாகவும், அதானி குழுமம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் இருந்து வந்தது.

இதுதொடர்பான குற்றச்சாட்டை பாஜக எம்.பி.நிஷிகந்த் துபே, நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு முறையான பதில் அளிக்காத மஹூவா மொய்த்ரா, பாஜக எம்.பி. நிஷிகந்த் துபே மீது, குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அதாவது, தேர்தல் மனுதாக்கல் செய்யும்போது, போலியான பட்டப்படிப்பு சான்றிதழை தாக்கல் செய்ததாக கூறினார். இந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், துபே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இது நாடாளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு பற்றிய கேள்வி. என்.ஐ.சி நிறுவனம் உங்களை அனுகியது துபாயில் இருந்தா அல்லது இல்லையா? என்ற கேள்விக்கு அந்த எம்.பி பதில் அளிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் பணத்திற்காக கேட்கப்பட்டதா? இல்லையா என்ற கேள்விக்கும், அந்த எம்.பி பதில் அளிக்க வேண்டும்.

வெளிநாடு சுற்றுலா செல்வதற்காக இந்த கேள்விகள் கேட்கப்பட்டதா என்றும் அவர் பதில் அளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

தொடர்ந்து பதிவிட்ட நிஷிகந்த் துபே, “ மஹூவா மொய்த்ரா வெளிநாடு செல்வதற்கு, மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதியை பெற்றாரா? இல்லையா?.

இது அதானி, பட்டம், திருட்டு ஆகியவற்றை பற்றிய கேள்வி அல்ல. ஆனால், இது ஊழல் மற்றும் நாட்டை தவறான பாதைக்கு வழிநடத்துவது தொடர்பான கேள்வி” என்று கூறினார்.

More in இந்தியா

To Top