ஒரே நேரத்தில் கர்ப்பமான நடிகைகள் – ரசிகர்கள் குழப்பம்!

கர்ப்பம் தரிப்பது என்பது இயல்பான விஷயம் தான். இருப்பினும், நடிகைகள் யாராவது, கர்ப்பம் அடைகிறார்கள் என்றால், அது அனைவராலும் கவனிக்கக் கூடிய விஷயமாக மாறி விடுகிறது.

இவ்வாறு இருக்க, நடிகை நித்யா மேனன், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கர்ப்பத்தை உறுதி செய்யும் கருவி உள்ளது. இதன்காரணமாக, இவர் கர்ப்பமடைந்துவிட்டதாக, நெட்டிசன்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, இதே புகைப்படத்தையும், நடிகை பார்வதியும், தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு நடிகைகள் இரண்டு பேரும், ஒரே புகைப்படத்தை பதிவிட்டுள்ளதாால், ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஒருவேளை இது பட புரோமோஷனாக கூட இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.