ஓகே கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, திருச்சிற்றம்பலம் என்று பல்வேறு ஹிட் படங்களில் நடித்தவர் நித்யா மேனன். இவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தனது பெயருக்கு பின்னால் உள்ள மேனன் என்ற பெயர் சாதிய பெயர் அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும், அந்த பெயரை மேனன் என்று உச்சரிக்காமல், மெனன் என்று தான் சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அம்மா மற்றும் அப்பா பெயரை சேர்த்து என்.எஸ்.நித்யா என்று பெயர் வைத்துக் கொண்டேன். ஆனால், பாஸ்போர்ட்டில் சில பிரச்சனைகள் வரும் என்பதால், பெயருக்கு பின்னால், மெனன் என்ற பெயரை வைத்தேன்.
ஆனால் அதனை சிலர் சாதிய பெயர் என்று நினைத்துக் கொண்டார்கள். சாதியின் பெயரை பயன்படுத்த, எனக்கும், எங்களது குடும்பத்துக்கும் பிடிக்காது என்று அவர் கூறியுள்ளார்.