திருச்சி சிவாவின் மகனுக்கு விருது வழங்கிய நித்யானந்தா!

சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் உறவு, மாணவிகளிடம் அத்துமீறியது உள்ளிட்ட பல்வேறு புகார்களுக்கு சொந்தகாரர் சுவாமிஜி நித்யானந்தா.

போலீசார் கைது செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் நாட்டில் இருந்து தப்பி ஓடிய இவர், கைலாசா என்ற நாட்டை உருவாக்கி, அங்கு வாழ்ந்து வருகிறார்.

அந்த நாட்டிற்கென தனி நாணயம், விசா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பிரத்யேகமாக உருவாக்கி உள்ளார். இவர், நேற்று விஜயதசமி தினத்தையொட்டி, கைலசா விருதுகளை அறிவித்தார்.

அதன்படி, திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் OBC பிரிவு மாநில பொதுச் செயலாளருமான சூர்யாவிற்கு, தர்ம ரட்சகர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருச்சி சூர்யா, கைலாசாவின் தர்ம ரட்சகர் விருது பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஓம் நமச்சிவாயம். நித்யானந்தம் என்று பதிவிட்டுள்ளார்.