பிரபல யூடியூபர் இர்பான் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தனது குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக தெரிவித்த காரணத்தால் அவரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இது தொடர்பாக இர்பானிடம் விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் குழுவும் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இர்பான் தனது செயல்பாட்டுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்நிலையில் இர்பான் தன்னுடைய விளக்கத்தையும், மன்னிப்புக் கடிதத்தையும் மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கொடுத்த நிலையில் அவர் மீது மேல்நடவடிக்கை இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.