இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் சகுந்தலம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
மகாபாரதத்தில் இடம்பெற்ற சகுந்தலா மற்றும் ராஜா துஷ்யந்த் இருவரும் காதல் கதையை மையமாக கொண்டு இப்படம் தயாராகி உள்ள இப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகிறது.

அடுத்த வாரம் படம் வெளியாக உள்ள நிலையில் இதுவரை திரையரங்க வியாபாரம் முடியவில்லை. விநியோகஸ்தர்களுக்கு குறைந்த விலை கூறினாலும் வாங்க யாரும் தயாராக இல்லை என கூறப்படுகிறது.