நீட் தோ்வை ரத்து செய்ய வாய்ப்பே இல்லை: வானதி சீனிவாசன்!

நீட் தோ்வை ரத்து செய்ய வாய்ப்பே இல்லை என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் தேசிய கைத்தறி தின விழாவை கொண்டாடும் விதமாக பாஜக நெசவாளா் அணி சார்பில், ஊா்வலம் நடைபெற்றது. இதை காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் அருகிலிருந்து தொடங்கி வைத்து அதில் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியது: நீட் தோ்வு குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவான கருத்தைத் தெரிவித்திருக்கிறது. தமிழக அராசல் நீட் தோ்வை ரத்து செய்ய முடியாது. அதற்கான வாய்ப்பும் இல்லை. தொடா்ந்து பொய்யான வாக்குறுதிகளை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார்.

நெசவாளா்களின் முன்னேற்றத்துக்காக பிரதமா் மோடி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 -ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஒரு மாவட்டத்துக்கு ஒரு பொருள் என்ற திட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பதை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.

மீனவ மக்களுக்கு மத்திய அரசு செய்த உதவிகள் ஏராளம். ஆனால், மோடி அரசு எந்த உதவியும் செய்யவில்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் சொல்வதை ஏற்கவே முடியாது என்றார்.

RELATED ARTICLES

Recent News