நெல்லை மேயருக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்!

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மீது மாமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மற்றும் விவாதம் இன்று (ஜன.12) மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மாமன்ற உறுப்பினர்கள் ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எனவே இன்றைய வாக்கெடுப்பில் திமுக மற்றும் தோழமைக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கான வாய்ப்பில்லை என தெரிய வருகிறது.

வரலாற்றில் முதன்முறையாக ஆளுங்கட்சி மாமன்ற உறுப்பினர்களே மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது இதுதான் முதல் முறை.

16 ஆண்டுகளுக்குப் பிறகு 2022ல் திருநெல்வேலி மாநகராட்சியை கைப்பற்றியது திமுக.

கடந்த பல மாதங்களாக மேயர் – மாமன்ற உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. கட்சியின் தலைமை பலமுறை அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்திய பிறகும் மோதல் போக்கு தொடர்கிறது.

RELATED ARTICLES

Recent News