Connect with us

Raj News Tamil

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. என்ன ஆனது..? நாளை சிறை செல்வது உறுதியா?

இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. என்ன ஆனது..? நாளை சிறை செல்வது உறுதியா?

டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில், பணமோசடி செய்ததற்காக, முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, அவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. சமீபத்தில், தேர்தல் பிரச்சாரத்தையொட்டி, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

நாளையோடு, கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமீன் முடிய இருப்பதால், ஜாமீனை நீட்டிக்ககோரி நீதிமன்றத்தில் மனு வழங்கினார். இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த விசாரணையின்போது, கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவுக்கு, அமலாக்கத்துறை கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தது.

மேலும், அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு எதிரான உண்மைகளை அடக்கி வைத்துள்ளதாகவும், தனது உடல்நலம் உட்பட பல்வேறு விஷயங்களில் பொய்யான வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும், சிறப்பு நீதிபதி காவேரி பவேஜாவிடம், அமலாக்கத்துறை கூறியிருந்தது.

இதையடுத்து, வாதாடிய அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு, முதலமைச்சரின் உடல்நலம் சரியாக இல்லை என்றும், அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. இவ்வாறு இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை, வரும் ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதன்மூலம், அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சிறைக்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

More in இந்தியா

To Top