சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சி நடந்துள்ளது.
எந்த ஓர் அரசும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கக் கூடாது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு மாற வேண்டும், சிந்தனை மாற வேண்டும், கொள்கைகள் மாற வேண்டும், ஆட்சியாளர்கள் மாற வேண்டும்.
நாடு முன்னேற வேண்டுமானால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். தற்போதைய ஆட்சி செல்ல வேண்டும். எனவே, மக்கள் மாற்றத்துக்கு வாக்களிக்க வேண்டும், இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
பாஜக 420 அல்லது 430 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது. அப்படி இருக்கும்போது அக்கட்சி எப்படி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என அவர் கூறினார்.