2025-ஆம் ஆண்டுக்கான சேம்பியன்ஸ் டிராபி போட்டியை, பாகிஸ்தான் நாடு நடத்த இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு, பாகிஸ்தானிடம் இருந்து திரும்ப பெற இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது, 20 ஓவர் உலகக் கோப்பையின் நடப்பு சேம்பியன்ஸாக இருக்கும் இந்திய அணி, பாதுகாப்பு பிரச்சனைகளின் காரணமாக, பாகிஸ்தான் நாட்டில் நடக்கும் சேம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்துக் கொள்ள மாட்டோம் என்றும், இந்தியாவுக்கான போட்டியை மட்டும் ஸ்ரீ லங்கா அல்லது சவுதி அரேபியாவில் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளதாக, தகவல் பரவி வந்தது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை, சமீபத்தில் நடந்த மீட்டிங்கின்போது விவாதிக்கப்பட்டுள்ளது.
ICC-யின் சார்பில் நடத்தப்பட்ட இந்த கமிட்டி மீட்டிங்கில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள், இந்தியாவுக்கு ஆதரவாக பேசியுள்ளதாம். இதனால், சேம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை, பாகிஸ்தான் நழுவ விட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.