அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடந்து வருகிறது. அதிமுக நான்கு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், தங்களின் செல்வாக்கை நிரூபிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுக்கூட்டத்தை கூட்டி தன்னுடைய பலத்தை காட்டி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுத்துள்ளனர். அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடக்கவுள்ள இக்கூட்டத்தில், பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்க உள்ளன. இதற்கு போட்டியாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெரும் என்று இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், நீதி மன்ற வழக்கு, பாஜக அதிமுக நிர்வாகிகள் மோதல், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.