இரவெல்லாம் யோசித்து விட்டு அவதூறு பரப்புவதா? செல்வப்பெருந்தகை கண்டனம்!

கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கட்சி, நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. இதில், விருதுநகர் தொகுதியில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

விஜய பிரபாகரன் தோற்கவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார் என தேமுதிகவின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு மையத்தில் 24 மணி நேரமும் சிசிடிவி வைத்து கண்காணிக்கப்பட்டுள்ளது.

அங்கு எந்த தவறும் நடக்கவில்லை. சந்தேகம் இருந்திருந்தால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு இருக்கலாம். ஆனால், இரவெல்லாம் யோசித்து விட்டு சென்னைக்கு வந்தவுடன், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காங்கிரஸ் மீது அவதூறாக பரப்புவதை தவிர்க்க வேண்டும் என அவர் பேசியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News