இனி அத்தை-மாமன், மகன்-மகளை திருமணம் செய்யக் கூடாது! – அமலுக்கு வந்த சட்டம்!

அத்தை மாமா மகன் மகள்களை திருமணம் செய்வது தென் மாநிலங்களில் இயல்பான ஒரு விஷயம். ஆனால் வடமாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இது போன்ற திருமணங்களை உயர்நீதிமன்றம் தடைசெய்துள்ளது.

இந்நிலையில், உத்தரகண்டில் அத்தை, மாமன் மகள் அல்லது மகனை திருமணம் செய்ய தடை விதித்து பொது சிவில் சட்டம் இன்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகளை அமல்படுத்தியுள்ளது.

திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News