80ஸ் 90ஸ் களில் பாடல் காட்சிகளுக்கு மட்டும் பாரினுக்கு சென்று வந்த நிலையில் தற்போதெல்லாம் முழு படத்தையுமே ஃபாரினில் எடுக்க தொடங்கிவிட்டார்கள். இதனால் தமிழகத்தை சேர்ந்த திரைத்துறை தொழிலாளர்கள் வேலைவாய்ப்பில்லாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், பெப்சியும் இணைந்து சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதாவது, தமிழ் படங்களில் தமிழ் நடிகர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டுக்குள்ளயே படப்பிடிப்பை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே ஃபாரின் செல்லவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனையறிந்த தமிழ் திரைப்பட கலைஞர்கள் இனிமேல் நமக்கு வேலை கன்பார்ம் என்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.