Connect with us

Raj News Tamil

மகளிர் உரிமைத் தொகை வேண்டாம் இலவசமாக குடிநீர் கொடுத்தால் போதும்: சீமான்!

அரசியல்

மகளிர் உரிமைத் தொகை வேண்டாம் இலவசமாக குடிநீர் கொடுத்தால் போதும்: சீமான்!

ரூ.1000 உரிமைத் தொகை வேண்டாம். வைத்துக் கொள்ளுங்கள். மக்களுக்கு இலவசமாக குடிநீர் கொடுத்தால் போதும் என்றார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்..

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்:

அப்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும்; களத்தில் நிறைய வேலைகள் இருக்கின்றன. வேலைகளைப் பார்க்கட்டும். தவறில்லை.

தமிழகத்தில் சாதிய பிரச்னைகள் இருக்கின்றன என்பதை ப. ரஞ்சித்தும், மாரி செல்வராஜும் பதிவு செய்கிறார்கள். அதில் தவறில்லை. அரை நூற்றாண்டு காலம் பெரியார் மண் என்று சொல்லி வந்தார்கள்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பட்டியலினத்தைச் சேர்ந்தவரை பேரவைத் தலைவராக்கினார். திருச்சி பொதுத்தொகுதியில் தலித் எழில்மலையை நிற்கவைத்து வெற்றி பெற வைத்தார்.

திமுக ஆ. ராசாவை நீலகிரிக்கு ஏன் அனுப்ப வேண்டும்? பெரம்பலூர் பொதுத் தொகுதியிலேயே நிறுத்தி வெற்றி பெற வைக்கலாமே?

மலை, மண் வளம் என்பது அடுத்து வரப்போகிற தலைமுறைக்கும் சேர்த்து இயற்கை கொடுத்த கொடை. இவற்றை கொள்ளையடித்தால் அடுத்து வரும் தலைமுறை எங்கே போவார்கள்?

இப்போதே ஒரு குடம் குடிநீருக்கு ரூ. 15 கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் மாதத்துக்கு பெருந்தொகை செலவாகிறது.

எங்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வேண்டாம். வைத்துக் கொள்ளுங்கள். மக்களுக்கு இலவசமாக குடிநீர் கொடுத்தால் போதும்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்தியை நீங்கள் எப்படி தகுதி நீக்கம் செய்யலாம். மக்களால் தோற்கடிக்கப்பட்டவரை எல்லாம் மாநிலங்களவை உறுப்பினராக்குகிறீர்கள்? ராகுல்காந்திக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்? என்றார்.

நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை ஜனநாயகமாக முடிவெடுத்து சர்வாதிகாரமாக செயல்படுத்துவதுதான்.

ஒரு கப்பலுக்கு ஒரு மாலுமி தான் இருக்க முடியும்; ஒரு பேருந்துக்கு ஒரு ஓட்டுநர்தான் இருக்க முடியும். ஓட்டத்தெரியும் என்பதால் எல்லோரும் ஒரே பேருந்தை ஓட்ட முடியாது.

இப்படித்தான் நாம் தமிழர் கட்சி நடைபெறும் என்று சீமான் தெரிவித்தார்.

More in அரசியல்

To Top