விமான பணிப்பெண்ணாக ஆரம்பித்து பின்னர் சின்னத்திரை நயன்தாரா என்று சொல்லுமளவிற்கு தன்னை உயர்த்தி கொண்டவர் வாணி போஜன். ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக வந்து ரசிகர்களை கவர்த்திருப்பார்.
சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் சம்பளமே வாங்காமல் நடிக்க தயாராக உள்ளதாக கூறியிருக்கிறார். அதாவது விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் பணம் வாங்காமல் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதிலிருந்து இவர் விஜயின் தீவிர ரசிகர் என்பது தெரிகிறது.
வெள்ளித்திரை நயன்தாராவுடன் நடித்த விஜய் சின்னத்திரை நயன்தாராவுடன் நடிப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.