இனி பில் போடும் போது மொபைல் நம்பரை கொடுக்க தேவையில்லை..!

சில்லறை வர்த்தக கடைகளில் வாடிக்கையாளர்கள் வாங்கிய பொருட்களுக்கு பில் போடும் போது அவர்களிடம் மொபைல் நம்பர் கேட்பது வழக்கம். வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் நம்பரை பிறரிடம் பகிர்வதில் தயக்கம் உள்ளதாகவும் இதனால் பல சைபர் மோசடிகள் நடப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் புகார்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது சில்லறை வியாபாரிகள் தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மொபைல் நம்பர் கேட்டு கட்டாயப்படுத்தகூடாது என்றும் இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் படி நியாயமற்ற செயல் வேண்டும் என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News